// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** அறுவடை நேரத்தில் டெல்டாவில் வெளுத்து வாங்கிய மழை வருந்தும் விவசாயிகள்

அறுவடை நேரத்தில் டெல்டாவில் வெளுத்து வாங்கிய மழை வருந்தும் விவசாயிகள்

 மிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பலஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.


இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக 15 ஆயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் சாய்ந்தன. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் பல்லாயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் முற்றிலும் சாயக்கூடிய நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.இதே போன்று நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments