// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில பொருளாளராக க.இப்ராகிம் தேர்வு

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில பொருளாளராக க.இப்ராகிம் தேர்வு

பிப்ரவரி 5ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான  மாணவர்கள் பங்கேற்ற மாணவர் பேரணியும், பிப். 6, 7 தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடும் சென்னை தண்டையார்பேட்டை வாணி  மஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் மெள.குணசேகர் தலைமைத் தாங்கினார். மாநிலச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் அரசியல் மற்றும் வேலை அறிக்கை சமர்பித்தார். மாநாட்டில்,  தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் கல்லூரிகளாக மாற்றும் முயற்சிகளை ஒன்றிய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாநாடில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழ்நாடு மாநில பொருளாளராக திருச்சியைச் சேர்ந்த க.இப்ராகிம் தேர்வு செய்யப்பட்டார். மேலும் மாநிலத் தலைவர் தினேஷ் சீரங்கராஜ், மாநில செயலாளராக பா.தினேஷ்,

துணைத் தலைவர்களாக, ஆ.பிரகாஷ், வெ.நிருபன், பா.சினேகா, ரா.விக்ரம், துணைச் செயலாளர்களாக, ஜே.பி.வீரபாண்டியன், இரா.ராமசாமி, முத்துலெட்சுமி, பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.





இதை தொடர்ந்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில பொருளாளர் க.இப்ராகிம் தேர்வு செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி (ex.MLA), தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம். செல்வராஜ், திருச்சி மாவட்ட செயலாளர் எஸ்.சிவா உள்ளிட்ட வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments