// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சியில் TURF 09 SPORTS ARENA மைதானம் திறப்பு விழா

திருச்சியில் TURF 09 SPORTS ARENA மைதானம் திறப்பு விழா

திருச்சி கே.கே.நகர் அருகிலுள்ள குறிஞ்சி நகரில் TURF 09 SPORTS ARENA-வின் துவக்கவிழா நடைபெற்றது...

இந்த துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி  வருகைபுரிந்து விளையாட்டு மைதானத்தை துவக்கி வைத்தார்கள். 


இந்த நிகழ்ச்சியில் மணிவேல், பகுதி செயலாளர், திருமதி மலர்விழி ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர், 64-வது வார்டு, திருமதி. பொற்கொடி, மாமன்ற உறுப்பினர், 63-வது வார்டு மற்றும் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் 


இந்த மைதானம் ஐவர் கால்பந்து போட்டிகள் நடத்துவதற்கும், சிறுவர்கள் , பள்ளி கல்லூரி மாணவர்கள் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் வகையில் செயற்கை தளத்தில் (TURF)மிகச்சிறந்த முறையில் R.வஜீத் மற்றும் குடும்பத்தினர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.



 இந்த நிகழ்வில் ரெங்கராஜு, கன்வீனர், திருச்சிராப்பள்ளி மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் பாரதி சங்கர், TURF 09 SPORTS ARENAவின் கால்பந்து பயிற்றுநர் ஆகியோர் விழாவில் பங்குபெற்று சிறப்பித்தனர்.

இவ்விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை உரிமையாளர் R.வஜீத் அவர்கள் தெரிவித்து கொண்டார்

Post a Comment

0 Comments