// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குண்டும் குழியுமான சாலை - சீரமைக்க எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குண்டும் குழியுமான சாலை - சீரமைக்க எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை

 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு செல்லும் பாதை  குண்டும் குழியுமாக நீண்ட நாட்களாக உள்ளது... கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த பகுதி முற்றிலும் சேறும் சகதியுமாக உள்ளது.. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சீர்கேடான சாலை  இருப்பதை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு தொகுதி செயலாளர் முஹம்மது சலீம் அந்த இடத்தை பார்வையிட்டார்.


பொது மக்கள்,வாகன ஓட்டிகள், என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.


எனவே உடனடியாக அப்பாதையை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய எஸ் டி பி ஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி நிர்வாகத்தின் சார்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.



Post a Comment

0 Comments