BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நலத்திட்டங்கள் வழங்கும் விழா

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நலத்திட்டங்கள் வழங்கும் விழா

கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை போற்றும் வகையில் 50 பெண் தூய்மை பணியாளர்களாகளுக்கு பாராட்டு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது...


 அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்  அகில இந்திய கொளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யுமான நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சி பகுதியான கணபதியில் உள்ள 20 வது வார்டு கே. ஆர். ஜி. நகர் பகுதியில் உள்ள  சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் 50 பெண் தூய்மை பணியாளர்களுக்கு  அமைப்பின் சார்பில் பாராட்டு  நலதிட்ட உதவிகள் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..



இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சிபிஐ அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரும் அமைப்பின் கொளரவ தலைவருமான Rtn N.சுந்தரவடிவேலு அவர்கள் மற்றும் உதயம் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை  வழங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தனர்..






நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  பேசிய மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேலு அவர்கள்  ஆண்களுக்கு நிகராக தற்பொழுது பெண்களும் அனைத்து துறையிலும் சாதிக்கும் நிலை வந்துவிட்டது, ஆயினும் நம் இந்திய தேசம், அனைத்து தேசங்களின் மத்தியில், தலை நிமிர்ந்து நிற்க பெண்கள் மேலும் பல சாதனைகளை படைக்க அவர்கள்  முன்வர வேண்டும்  எனவும், அப்படி வரும்  பெண்களுக்கு உறுதுணையாக ஆண்கள் துணை நிற்க வேண்டும் எனவும், அவ்வாறு பெண்கள்  சாதிக்கும் நிலையில், நிச்சயமாக இந்திய நாடு ஒரு பெருமை மிகுந்த நாடாக அனைத்து நாடுகளின் முன்னிலையில் தனி மதிப்பை பெறும் என்று தெரிவித்தார் , அதற்கு பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க எந்த தயக்கமும்  கொள்ளாமல், முன் வந்து நிற்க வேண்டும் என்றார், எதிர்ப்புகள் தடைகள் இருந்தாலும் அதை தகர்த்தெரிந்து பெண்கள் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யும்  பட்சத்தில் நிச்சயமாக அவர்கள் வெற்றி பெறுவது உறுதி நாமும், நமது நாடும் வளம் பெறும் என்று தெரிவித்தார்..




இந்த நிகழ்ச்சியானது அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவன தலைவர் ஆர் கே குமார் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் முனைவர்  வி. எச். சுப்ரமணியம் கலந்து கொண்டு  அனைத்து பெண் தூய்மை பணியாளர்களின்  செய்யும் பணிகள் அவர்கள் படும் கஷ்டங்கள் அவர்கள் செய்து வரும் பணி மிகுந்த சேவை மனப்பான்மையுடன் செய்ய கூடிய பணியாகும் ஆகவே அவர்களுக்கான பாராட்டு மற்றும் மரியாதையை நாம் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும் பெண்களை  வீட்டிலும் இந்த சமூகத்திலும் ஊக்கபடுத்த வேண்டும் அவர்கள் செய்யும் நற்செயல்களை மனதார பாராட்ட வேண்டும் என்று  பேசினார் 




மேலும் இவ்விழாவில் அமைப்பின் மாநில தலைவர் லதா அர்ஜுனன் அவர்கள் அமைப்பின் நிர்வாகிகள் மகளிர்  அணியின் கோவை மாவட்ட  துணை தலைவர் டாக்டர்.K.ரிஸ்வான பர்வீன் மகளிர் அணியின் துணை தலைவர் வழக்கறிஞர் V.தமிழ்ச்செல்வி மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் R. தேன்மொழி இசை கலைமாமணி கே.வி.சாந்தினி இயக்குனர் கே. சி. ஜஸ்வர்யா மகளிர் பிரிவு இணை செயலாளர் சித்ரகலா மற்றும் எஸ். முத்தமிழ் மாவட்ட துணை தலைவர் நாராயண செல்வராஜ்  மாநில துணை தலைவர் ஆர். ராஜேஷ் குமார் கொளரவ தலைவர் எம். கிருஷ்ணசாமி  துணை தலைவர்கள் ஆர். விஸ்வநாதன் பி.பக்கீர் முஹம்மத் எஸ். என். பாலசுப்ரமணியன் மூத்த வழக்கறிஞர் பி. சுந்தரபாலன் சமூக ஆர்வலர் பாபு பிரபு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண் தூய்மை பணியாளர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர் இவ்விழாவின் ஒருங்கிணைப்பு பணிகளை அப்பு மது மணிகண்டன் ராமஜெயம் உள்ளிட்டோர் செய்தனர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பெண் தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டு நினைவு பரிசு மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை க்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டது*

Post a Comment

0 Comments