// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் கொசு ,தெரு நாய்,பன்றிகளை ஒழிக்க மனிதநேய மக்கள் கட்சி மேயரிடம் மனு

திருச்சியில் கொசு ,தெரு நாய்,பன்றிகளை ஒழிக்க மனிதநேய மக்கள் கட்சி மேயரிடம் மனு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, பாலக்கரை, வரகனேரி, காந்தி மார்க்கெட்,பூக்கொல்லை, ஜின்னா திடல், ஆழ்வார் தோப்பு , பகுதியில் தெருநாய் தொல்லையும் கொசுக்கடி பிரச்சனையும்  38  வது வார்டு காமராஜர் பகுதியில்  பன்றிகளின் தொல்லை மற்றும் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..  


இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் மனு  அளித்தனர்..இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.  முகமது ராஜா தலைமையில்  மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி  

மாவட்ட துணைத் தலைவர்  மு. சையது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் காசிம்,  சம்சு, மாணவர் அணி  முகமது அலி ஜின்னா மற்றும் மாவட்ட அணி செயலாளர் அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments