// NEWS UPDATE *** “நரக வாசல் திறக்கும்” “நரகத்தின் வாசல் உங்களுக்காக திறக்க காத்திருக்கிறது டிரம்ப் அவர்களே” 48 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும்; இல்லையென்றால் ஈரானின் உட்கட்டமைப்புகளை தாக்குவோம் என டிரம்ப் கெடு விதித்திருந்த நிலையில் ஈரான் பதில் *** மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு அலுவலகத்திற்கு கூடுதல் பணியாட்களை நியமிக்க வேண்டும்!...இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் மனு

மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு அலுவலகத்திற்கு கூடுதல் பணியாட்களை நியமிக்க வேண்டும்!...இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் மனு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது அந்த மனுவில்:


தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பதிவு செய்யும் அலுவலகம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பணியாளர் மட்டுமே வேலை செய்து வருவதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து பதிவு செய்ய வரும் ஏராளமான பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பதிவு செய்ய முடியாமலும், பல நாட்கள் அலையும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.


இதனால் பொதுமக்களும் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும் அதிகம் பாதிப்படைகின்றனர்.ஆகவே இதை சரி செய்யும் பொருட்டு பதிவு அலுவலகத்திற்கு கூடுதல் பணியாட்களை உடனடியாக நியமித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.


இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன்,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர்.மைதீன் அப்துல் காதர், துணைத் தலைவர் நவாப் கான் மற்றும் உறையூர் வல்லல் இப்ராஹிம்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments