// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தேசிய கல்லூரியில் வணிகவியல் பேரவை கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் வணிகவியல் பேரவை கூட்டம்

 திருச்சி தேசியக் கல்லூரி குளிர்மை கலையரங்கில் வணிகவியல் பேரவைக் கூட்டம் இன்று துவங்கியது . சிறப்பு விருந்தினராக பக்தி வேதாந்த கலாச்சார மற்றும் கல்வி அகாடமி தலைவர் இராதிகா வல்லப தாஸ் கலந்து கொண்டு தேர்வா அல்லது வாழ்கையா? என்ற தலைப்பில் உரையாற்றினார். அவருடைய சிறப்புரையில் கூறியதாவது:

தேர்வு வாழ்க்கைக்கா அல்லது வாழ்க்கை தேர்விற்கா? , வாழ்க்கைக்கு தேவையானதை வளர்த்துக் கொண்டு சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையானதை செய்ய வேண்டும் , சுய முன்னேற்றத்தினை விட சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தருதல் வேண்டும், எதிர்பாராத வாழ்க்கை சம்பவங்களை எதிர் கொள்ளும் வல்லமையையும் துணிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும், குருவிடம் கற்ற கல்வியினைக் கொண்டு வாழ்க்கையில் உள்ள எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டும், கலாச்சாரம், அறிவு , பக்தி இவை மூன்றும் கல்வியின் கூறுகளாகும் , வாழ்க்கையில் முன்னேற சிறிது நேரம் கடவுளை தொழுவதற்காகவும் ஒதுக்க வேண்டும், நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், நல்ல மனிதர்களின் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் முத்துப் போல் ஜொலிக்கலாம் என்று கூறினார். கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் கி. குமார் தலைமையுரையாற்றினார.முனைவர் இரா. சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார். 






விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர் ம. சௌரியார் துரைசாமி செய்தார். முன்னதாக இளநிலை மூன்றாமாண்டு வணிகவியல் பயிலும் மாணவர் அஸ்வின் விஷ்வநாத் வரவேற்புரையாற்றினார். இளநிலை மூன்றாமாண்டு மாணவர் முரளிதரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாணவிகள் ஜெயஶ்ரீ மற்றும் அக்ஷய லட்சுமி தொகுத்து வழங்கினர். திரளான பேராசிரியர்கள் , மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments