BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** தேசிய கல்லூரியில் விலங்குகளின் உயிரணு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

தேசிய கல்லூரியில் விலங்குகளின் உயிரணு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியின் (தன்னாட்சி) உயிரி தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் துறையானது பாலூட்டிகளின் உயிரணு வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த பட்டறையை 2023 மார்ச் 20-21 மற்றும் 24-25 தேதிகளில் ஏற்பாடு செய்தது. உயிரணு வளர்ப்பு நுட்பங்களில் பங்கேற்பாளர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிப்பதற்காக இந்தப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. . இப்பயிற்சியானது இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு  முதல் தொகுதி ஒன்பது பங்கேற்பாளர்களைக்கொண்டு நடந்தது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் கே.குமார் துவக்கி வைத்தார். மேலும், கற்பிக்கப்படும் நுட்பங்களில் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளின் ஆய்வகக் கையேடும் தொடக்க விழாவில் வெளியிடப்பட்டது.


உயிரித்தொழில்நுட்பத்துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை தலைவர் முனைவர் முகமது ஜாபிர், பேராசிரியர் டி.வசந்த் ஆகியோர் இணைந்து பயிற்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் வசந்த் கலந்து கொண்டு பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். 



இரண்டு நாட்கள் பயிற்சியின் முடிவில், பங்கேற்பாளர்கள் முதல்வரிடம் இருந்து சந்திரிகழ்கள் பெற்றுக்கொண்டனர். அப்போது, அவர்கள், பயிற்சியின் போது தாங்கள் பெற்ற அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, கல்லூரிக்கும், பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்த பேராசிரியர்களுக்கும் நன்றிகூறினர். 

மேலும் இப்பயிற்சி தங்களுக்கு வருங்காலங்களில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறினர்...


நிருபர் ரூபன் 



.

Post a Comment

0 Comments