NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் கொசு ,தெரு நாய்,பன்றிகளை ஒழிக்க மனிதநேய மக்கள் கட்சி மேயரிடம் மனு

திருச்சியில் கொசு ,தெரு நாய்,பன்றிகளை ஒழிக்க மனிதநேய மக்கள் கட்சி மேயரிடம் மனு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, பாலக்கரை, வரகனேரி, காந்தி மார்க்கெட்,பூக்கொல்லை, ஜின்னா திடல், ஆழ்வார் தோப்பு , பகுதியில் தெருநாய் தொல்லையும் கொசுக்கடி பிரச்சனையும்  38  வது வார்டு காமராஜர் பகுதியில்  பன்றிகளின் தொல்லை மற்றும் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..  


இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் மனு  அளித்தனர்..இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.  முகமது ராஜா தலைமையில்  மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி  

மாவட்ட துணைத் தலைவர்  மு. சையது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் காசிம்,  சம்சு, மாணவர் அணி  முகமது அலி ஜின்னா மற்றும் மாவட்ட அணி செயலாளர் அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments