தமிழக அரசு 161 வது சட்ட பிரிவை பயன்படுத்தி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மரக்கடை பகுதியில் இன்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது மற்றும் திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, திருவெறும்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி, மேற்கு தொகுதி தலைவர் சிராஜ்
மாவட்ட செயலாளர்கள் மதர் ஜமால் முகமது, ஏர்போர்ட் மஜீத், தளபதி அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் பக்ருதீன் உள்பட நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
0 Comments