// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** வெள்ளிக்கிழமை முதல் நோன்பு திருச்சி ஹிலால் கமிட்டி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை முதல் நோன்பு திருச்சி ஹிலால் கமிட்டி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது மிக முக்கிய கடமையாகும் 30 நாட்கள் நோன்பு நேற்று  ரமலான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான நோன்பின் முதல் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகே உள்ள பேகம் பள்ளிவாசலில் இன்று மாலை 7 மணிக்கு திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள், மற்றும் திருச்சி மாவட்ட அரசு டவுன் ஹாஜி  மௌலவி ஜலில் சுல்தான் அலீம்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த  கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய  ஜமாத்துல் உலமா சபைத் தலைவரும், அரபிக் கல்லூரி முதல்வருமான முகமது ரூஹில் ஹக் ஹஜரத்  செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்   



 கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் பல பகுதிகளிலும் ரமலான் முதல் பிறை தென்படாததால் இன்று ஷபான் மாதத்தின் பிறை 30 என்பதாலும்   நாளை இரவு சிறப்ப உ தொழுகை ஆரம்பம் எனவும் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் 


Post a Comment

0 Comments