BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

 தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் எனவும், இந்த ஆண்டில் 4,829 கடைகளாக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் டாஸ்மாக் பணியாளர்களின் தொகுப்பூதியம் உயர்த்தப்படும் என உறுதி அளித்தார்.


கோயில், பள்ளிகள் அருகே இயங்கியதாக வந்த புகாரில் கடந்த 2 ஆண்டுகளில் 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவியாளர்களுக்கு ரூ.840 மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என உறுதி அளித்தார். 


தமிழகத்தில் மதுவிற்பனை கடந்த 2021-22 ஆம் ஆண்டை விட 2022-23 ஆம் ஆண்டு ஒரே நிதியாண்டில் 8 ஆயிரத்து 47 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments