BREAKING NEWS *** ”வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”- அமைச்சர் சேகர்பாபு *** ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி முகூர்த்தகால் நடும் வைபவம்

ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி முகூர்த்தகால் நடும் வைபவம்

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா வருகின்ற 19ம் தேதி அன்று நடைபெறுகிறது, 


நாளை முதல் சித்திரை தேர் திருவிழா உற்சவம் தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது, 


இதற்காக ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தேரின் மீது முகூர்த்தக்கால் நட்டனர்.

நிகழ்வின்போது திருக் இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


14ஆம் தேதி அன்று கருடசேவை வைபவமும், 19ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது

Post a Comment

0 Comments