// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** YMCA பள்ளியில் குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு

YMCA பள்ளியில் குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு

 திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள YMCA மழலையர் துவக்கப் பள்ளியில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ₹.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.இதில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு குழந்தைகள் விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார்.










இந்நிகழ்வில் பள்ளியின் பொது செயலாளர் பர்ணபாஸ், தாளாளர் டாக்டர் மார்டின், பொருளாளர் ரெக்ஸ், தலைமை ஆசிரியர் ஷீலா செலஸ், துணை தலைவர் நோபுள் ரிச்சர்ட், ஸ்போர்ட்ஸ் சேர்மன் தாமஸ், பொறியாளர் கண்ணன் உள்பட பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments