// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தமிழ்நாடு வாரிய தலைவரை சந்தித்து எர்த் மூவர்ஸ் உரிமையாளர் மனு

தமிழ்நாடு வாரிய தலைவரை சந்தித்து எர்த் மூவர்ஸ் உரிமையாளர் மனு

 திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் தமிழ்நாடு வாரிய தலைவர்  பொன் குமார் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.


திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு நல வாரிய தலைவர் பொன்குமார் அவர்களுடன் இன்று நமது சங்கத்தின் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் மற்றும் நமது மாவட்டத்தில் இயங்கும் வெளி மாநில இயந்திரத்தின் வேலை வாய்ப்புகளை முற்றிலும் தடுத்து நமது திருச்சி மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் S. மஞ்சுநாத், துணைத் தலைவர்கள் அம்மன் மகேஸ்வரன்,




யுவனராஜ்,PKG பாலகிருஷ்ணன், செயலாளர் FLS டோமினிக்ராஜ், பொருளாளர் NLS தர்மர், துணைத் செயலாளர் கவுதம் கார்த்திக், மக்கள் தொடர்பு செய்தியாளர் SSR சரவணன் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments