// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி சமயபுரம் பூச்சொரிதல் விழாவையொட்டி தென்னூர் பாரதி நகரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி சமயபுரம் பூச்சொரிதல் விழாவையொட்டி தென்னூர் பாரதி நகரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவின் 5 வது வாரத்தை முன்னிட்டு திருச்சி தென்னூர் பாரதி நகர் பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 




பாரதி நகர் இளைஞர்கள் மற்றும் தெரு வாசிகள் சார்பில் இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான  சீனிவாசன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.  










இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் முஸ்தபா, அன்பழகன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ராஜேந்திரன், வட்ட செயலாளர் வெல்லமண்டி கன்னியப்பன்,  தொழிலதிபர் பொறியாளர் இப்ராஹிம்ஷா உள்பட அப்பகுதி இளைஞர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments