திருச்சி மாவட்ட திமுக சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்னும் வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த புகைப்பட கண்காட்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
முன்னதாக கண்காட்சி அரங்கில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்களுடன் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடி, கண்காட்சி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினர்களிடம் எடுக்கப்படும் பேட்டிகள் கண்காட்சியின் திரையில் ஒளிபரப்பப்படுவதும், மேலும் தமிழக முதல்வரின் நேரடி பார்வைக்கு இது செல்கிறது என்பதும் கூடுதல் சிறப்பாகும்
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன்,தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஹாஜி.சம்சுதீன் இளைஞரணி மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அப்துல் காதர்,மகளிர் அணி மாவட்ட பொருளாளர் ஆரிபா, துணைத் தலைவர் ஆயிஷா,பீமநகர் கிளை தலைவர் ரஷிதா பேகம், காஜாநகர் கிளைத் தலைவர் பைசூர் ரஹ்மான்,சிந்தாமணி கிளைத் தலைவர் ஷாஜஹான், பூக்கொல்லை கிளைச் செயலாளர் கலீல் மற்றும் திமுக நிர்வாகி தஸ்தா ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.
0 Comments