// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** பெண் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

பெண் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

 திருச்சி கல்பாளையத்தில் வசித்து வருபவர் வி.ஏ.ஓ கலைவாணி ஸ்ரீரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். 



திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவர் கடையில் வாங்கிய புளி  சரியில்லை என கூறி  நேற்றிரவு  கடைக்கார் இப்ராஹிமிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  வி.ஏ.ஓ கலைவாணி அங்கு கடை வைத்திருந்த உறவினர்களை அழைத்து வந்து கேட்ட பொழுது இரண்டு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.


இந்த சிசிடிவி காட்சிகள் இன்று வெளியான நிலையில் விஏஓ கலைவாணி ஆட்களை வைத்து கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கடையில் வைத்திருந்த பணத்தை கலைவாணியின் ஆதரவாளர்கள்  சூறையாடி சென்றதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து விஏஓ கலைவாணியை பதவி நீக்கம் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்...




என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு அளித்தனர்.

Post a Comment

0 Comments