BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ஆக்கிரமிப்பு செய்யபட்ட அரசு நிலத்தை மீட்ட 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர்

ஆக்கிரமிப்பு செய்யபட்ட அரசு நிலத்தை மீட்ட 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர்

 திருச்சியில் 80 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு மீட்டுக் கொடுத்த 51 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி கருப்பையாவை பொதுமக்கள் பாராட்டினார்கள்



திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ரெட்டி தெரு‌ பகுதியில் கடந்த 70 ஆண்டு காலமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து அந்த இடத்தில் செடிகள் மரம் வளர்த்து வந்துள்ளனர்..


பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு   எங்கள் நிலம் யாரும் மண் கொட்டவோ வாகனங்களை திருப்பவும் கூடாது என்று ஆக்கிரமிப்பாளர்கள் கூறி வந்தனர். 


கடந்த மாநகராட்சி மாமன்ற தேர்தலில் 51-வது வார்டில் திமுகவைச் சேர்ந்த கலைச்செல்வி கருப்பையா மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை பொதுமக்கள் மாமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

டனடியாக மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி கருப்பையா அவர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டார்..


ஆக்கிரமிப்பு செய்யபட்ட நிலத்தை ஜேசிபி புல் டோசர் மூலமாக மண்களை சமன் செய்து ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்டார்.இந்த இடம் பற்றி பொதுமக்கள் கூறுகையில் இங்கு ஒரு பூங்காவோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையமோ  அமைக்கலாம் என்று பொதுமக்கள் கூறினர் இதை மாநகராட்சி மேயரிடம் தெரிவித்து பொதுமக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுப்பேன் என்று மாமன்ற உறுப்பினர்  கலைச்செல்வி கருப்பையா கூறினார்.

Post a Comment

0 Comments