// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மனிதநேய வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மனிதநேய வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

 திருச்சி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தகப் பிரிவான மனிதநேய அனைத்து வர்த்தக நலச் சங்கத்தின் தரைக் கடை பிரிவு வியாபாரிகள் சார்பாக மாவட்ட திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்‌ மனு அளித்தனர்..  30 ஆண்டுகளுக்கு மேலாக தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்யும் பகுதிகளான என் எஸ் பி ரோடு, தெப்பக்குளம், தெப்பக்குளம் ஆர்ச், தெப்பக்குளம் தென்கரை, நந்தி கோயில், பெரிய கடை வீதி ,தேரடி பஜார் ,சத்திரம் பஸ் ஸ்டாண்ட், காலேஜ் ரோடு, காமராஜர் வளைவு சாலை போன்ற பகுதிகளை வியாபார மண்டலங்களாக அமைக்க வலியுறுத்தியும் தரைக்கடை வியாபாரிகளுக்கு கொடுக்கக்கூடிய அடையாள அட்டை 



கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை போன்று இல்லாமல் வியாபாரிகள் எங்கு வியாபாரம் செய்கிறார்களோ அந்த இடத்தை உறுதி செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று கிழக்கு மாவட்ட தலைவர் எம் ஏ முகமது ராஜா அவர்கள் தலைமையிலும் வர்த்தக அணி மாவட்ட தலைவர் கபீர் அகமது மற்றும் 





மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப்அலி மாவட்ட பொருளாளர் காஜாமைதீன் மாவட்ட துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா மாவட்ட துணைச் செயலாளர் சம்சுதீன் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அன்சாரி வர்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளர் சிப்பாய்ப்துல்லா வர்த்தக அணி மாவட்ட பொருளாளர் மைதீன்

மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் 

மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தினால் மாவட்ட துணை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது அளிக்கப்பட்டது 



Post a Comment

0 Comments