BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தமிழகம் முழுவதும் சுற்றுசூழல் தினத்தையொட்டி மர கன்றுகள் நடும் விழா

தமிழகம் முழுவதும் சுற்றுசூழல் தினத்தையொட்டி மர கன்றுகள் நடும் விழா

 திருச்சி கோவை திருப்பூர் கிருஷ்ணகிரி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தில்  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் இயற்கை வளத்தை மற்றும் நமது பூமி தாயை பாதுகாக்கும் விதத்தில் குத்துச்சண்டை பயிற்சி பெரும் விளையாட்டு வீரர்கள் பள்ளி கல்லூரி பையிலும் மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு கொய்யா மாதுளை நெல்லி உள்ளிட்ட பழ வகையிலான மரகன்றுகள் மற்றும்  சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் மக்கும் வகையிலான பைகள்  வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..





முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும்  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கொளரவ தலைவருமான மாண்புமிகு நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்வு நடைபெற்றது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது...



தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சி காரணமாக புதிய தொழிற்சாலைகள் உருவாகிவரும் நிலையில் இன்னொரு பக்கம்  வளர்ச்சி பெயரில் பல நாடுகளில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன பல்வேறு நீர் நிலைகள் மாசடைந்து குடிநீர் குடிப்பதற்கு கூட தகுதி இல்லாத நிலை ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது



இது போன்று உணவு உற்பத்தி செய்யப்பட்டு வந்த விவசாய நிலங்கள் அழிந்து வருகின்றன இதுபோன்ற செயல்களால் இந்த பூமி மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுஒரு கட்டத்தில் இந்த பூமியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாத நிலை ஏற்பட கூடும் இதை மனித குலம் உணர வேண்டும் இந்த பூமி பந்து மட்டுமே மனிதர்கள் வாழும் தகுதியான ஒன்று வேறு எங்கும் மனிதர்கள் வாழும் தற்போது வரை இடம் இல்லை அதுபோன்று இந்த பூமியில் மனிதர்கள் வாழ்வது போல்  காடுகளில் விலங்குகள் பறவைகள் வாழ உரிமை உள்ளது...



அதை மனிதகுலம் உணர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்க படாமல் தொழில் வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் செயல் படவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில்  அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது..



திருச்சி  காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் குத்துச்சண்டை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி  பெரும் விளையாட்டு வீரர்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பழ வகையிலான கொய்யா மாதுளை நெல்லி உள்ளிட்ட மர கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது







 இந்த நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் மகளிர் பிரிவு செயலர் வழக்கறிஞர் கார்த்திகா விளையாட்டு பிரிவு செயலர் சுரேஷ் பாபு இணை செயலர் எழில் மணி சுகாதார ஆய்வாளர் லாரன்ஸ் பிஎச்எல் தொழிற்சங்க நிர்வாகி மிதுன் சக்கரவர்த்தி பப்பி நிர்வாகிகள் ஏ. முருகன் பத்மாதர்ஷனி அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்ப்ளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துச்சண்டை விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மர கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகளை வழங்கினர் இதுபோன்று கோவை மாவட்டம் காந்திபுரம் கணபதி பகுதியில் பொதுமக்களுக்கு அமைப்பின் நிறுவனர் & தலைவர் ஆர். கே. குமார் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்பிரமணியன் துணை தலைவர் செல்வராஜூ உறுப்பினர் மது ஆகியோர் மரகன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகளை வழங்கி  விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதுபோன்று திருப்பூர் மாவட்டத்தில் கருகவுண்டபாலையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைப்பின்  செயலாளரும், திரைப்பட இயக்குனருமான குமார் தங்கவேல் துணை செயலாளர் ராமசாமி பள்ளி தலைமை ஆசிரியர் பாப்பாத்தி துணை தலைவர் வினோத்ராம்  மற்றும் நிர்வாகிகள் பழனிசாமி துரைமுருகன் உள்ளிட்டோர் மரகன்றுகளை நட்டனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி. பி. நாகராஜ் தலைமையில்  நிர்வாகிகள் மர கன்றுகளை வழங்கியும் அப்பகுதியில் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நிகழ்வின் முடிவில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது

Post a Comment

0 Comments