BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** உலக செஸ் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான வட்டார அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டி

உலக செஸ் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான வட்டார அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டி

 (செஸ்) சதுரங்கம் என்பது நம்முடைய பழமையான விளையாட்டுகளில் ஒன்றாகும்.  கி.பி.6 ஆம் நுாற்றாண்டில் இந்தியாவில் செஸ் குறித்த எழுத்துப்பூர்வமான வடிவம் பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில், போர்க்களத்தில் எதிரிகளை சாய்க்க தேவையான திட்டங்களை வகுக்கும் கருவியாகவும் செஸ் பயன்பட்டது. பின் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் பிரபலம் ஆனது. கி.பி., 17 வது நுாற்றாண்டில் நவீன அளவிலான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டது. இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில், அனைத்து வயது மக்களாலும் விளையாடப்படுகிறது.



மேலும், 1800களில் செஸ் விளையாட்டு அபரீதமான வளர்ச்சியை கண்டது. முன்னதாக, செஸ் போட்டி சுமார் 14 மணி நேரம் வரை நடைபெற்று வந்தது. முஹல் முறையாக 19ஆம் நூற்றாண்டில் தான்  செஸ் போட்டிக்கான நேரம் ஒழுங்குமுறை வந்தது. ஸ்டெயினிட்ஸ் என்பவர் 1886ஆம் ஆண்டு முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இதையடுத்து, 1920களில் நவீன செஸ் போட்டியின் வளர்ச்சி நன்றாக அமைந்தது. இதன் காரணமாக  1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டைச் சேர்க்க பணிகள் நடைபெற்றது.


சர்வதேச செஸ் நாள்:

இதனை தொடர்ந்து ஜூலை 20, 1924 அன்று, பிரான்சின் பாரிஸில் நடந்த எட்டாவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில், முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தான் சர்வதேச செஸ் நாளாக  இன்று வரை கொண்டாப்பட்டு வருகிறது




இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள டாக்டர். ராஜன் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பிரத்தேகமாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் செஸ் போட்டி விளையாடுவதால் மாணவர்களின் அறிவு திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும், அதனுடன் சேர்ந்து கல்வித்திறன் அதிகரிக்க ஒரு முக்கிய விளையாட்டாக இது கருதப்படுகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர். 


இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோர்கள் அடுத்த மாவட்ட அளவிலான, மாநில அளவிலான நடைபெறக்கூடிய செஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments