// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்டம் உறையூர் பகுதி சார்பாக பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உறையூர் பாண்டமங்களம் பகுதியில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது


மாவட்ட பொருளாளர் ஹீமாயுன் மாவட்ட துணை செயலாளர் அசாருதீன் பகுதி தலைவர் ஆரிப் மற்றும் ரகுமானியாபுரம் சபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்





இக்கூட்டத்தில் தமுமுக கோவை மண்டலம்  சார்பாக வரக்கூடிய ஞாயிற்றுகிழமை இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி நடைபெற இருக்கும் கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்தை வெற்றியடைய செய்ய அதிகமானோர் கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..


தீர்மானத்தை_வலியுறுத்தி மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் M.P நஸீர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் பேசினார்கள்..இறுதியில் உறையூர் பகுதி தமுமுக செயலாளர் அபுதாஹிர் நன்றியுரை கூறினார்.

Post a Comment

0 Comments