// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு மமக மாவட்ட செயலாளர் அசரப் அலி மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஜூலை 9 கோவையில் நடைபெறக்கூடிய சிறை முற்றுகை போராட்டத்திற்கான செயல்பாடுகளை குறித்தும் பணிகளை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


மேலும் இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட துணை தலைவர் சையது முஸ்தபா 

மாவட்ட துணை அணி நிர்வாகிகள் பகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

Post a Comment

0 Comments