// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்டம் உறையூர் பகுதி சார்பாக பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உறையூர் பாண்டமங்களம் பகுதியில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது


மாவட்ட பொருளாளர் ஹீமாயுன் மாவட்ட துணை செயலாளர் அசாருதீன் பகுதி தலைவர் ஆரிப் மற்றும் ரகுமானியாபுரம் சபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்





இக்கூட்டத்தில் தமுமுக கோவை மண்டலம்  சார்பாக வரக்கூடிய ஞாயிற்றுகிழமை இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி நடைபெற இருக்கும் கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்தை வெற்றியடைய செய்ய அதிகமானோர் கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..


தீர்மானத்தை_வலியுறுத்தி மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் M.P நஸீர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் பேசினார்கள்..இறுதியில் உறையூர் பகுதி தமுமுக செயலாளர் அபுதாஹிர் நன்றியுரை கூறினார்.

Post a Comment

0 Comments