NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி அரபி கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி அரபி கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது..

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சமூக அமைப்புகள் அரசியல் கட்சியினர் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடி ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர்..


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபி கல்லூரியில் இந்திய நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டது.‌

அரபி கல்லூரி முதல்வர் மெளலானா  முஃப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி காஸிமி ஹழ்ரத் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்..

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உறுப்பினர் ,மெளலானா S. இன்ஆமுல் ஹஸன் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ..


திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மெளலானா முஹம்மது பஸீம் தாவூதி ஹழ்ரத் அவர்கள் வழிகாட்டுக் குழு  மற்றும் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் 

மெளலானா முஹம்மது சிராஜுத்தீன் ஃபாஜில் மன்பஈ ஹழ்ரத் அவர்கள்,திருச்சி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் உஸ்தாத்மார்கள் & ஜாமிஆவின் மத்ரஸா மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், காஜா நகர் பகுதி மக்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கொடி ஏற்றும் நிகழ்வில், மத்ரஸா மாணவர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இறுதியில் 

மெளலானா ஸஹல் ஹஜ்ரத் அவர்கள்

பேராசிரியர் ஜாமிஆ அன்வாருல் உலூம் நன்றியுரை ஆற்றினார்

Post a Comment

0 Comments