// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** சுதந்திர தின விழாவில் நடனமாடிய அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்

சுதந்திர தின விழாவில் நடனமாடிய அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்

 திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக நடனமாடிய அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

இந்திய திரு நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் திருச்சி சரக்கு டிஐஜி பகலவன், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி,திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் பல அரசு துறை கலந்து கொண்டனர்..


இந்நிகழ்வில்  காவல்துறையினரின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பின்னர் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி 1.62 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 157 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்த கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக நடனமாடிய மன்னச்சநல்லூர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பரிசுகளை வழங்கினார்.

Post a Comment

0 Comments