// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** குப்பை மேட்டை "நந்த வனமாக்கிய" 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ்

குப்பை மேட்டை "நந்த வனமாக்கிய" 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ்

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 23 செவ்ந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில்


குப்பை கழிவுகளால் காட்சியளித்த இடத்தை அழகிய பூங்காவாக்கி தூய்மையான இடமாக 23 வது வார்டு ஏரியா மேனேஜர் நளினி தலைமையில் தூய்மை பணியாளர்களால் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட அழகிய நந்தவனம்


இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் குமார், ஐந்தாவது மண்டல ஏரியா மேனேஜர் விஜயலட்சுமி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இளநிலை பொறியாளர் ரமேஷ் வேதா நிறுவன செயல் தலைவர் கிஷோர், மனித வள மேம்பாட்டு மேலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்

குப்பை மேடை நந்தவனம் ஆக்கிய கவுன்சிலர் சுரேஷ் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக 23 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் இப்பகுதியில் பல்வேறு திட்டங்களையும் பொதுமக்களுக்கு சேவைகளை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments