NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தேசியக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்

தேசியக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடைபெற்றது. தேசிய கல்லூரியின் கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் வரவேற்புரை வழங்கினார். 


முன்னாள் மாணவர் சங்க செயலர் திரு சோமசுந்தரம் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை நல்கினார். சாதாரண மாணவர்களையும் சரித்திரம் படைப்பவர்களாக உருவாக்குகிற ஆற்றலும் பெருமையும் மிக்கது தேசியக் கல்லூரி என்றும் விதைகளை கூட விருட்சங்களாக மாற்றுகிற வல்லமை தேசிய கல்லூரிக்கு உண்டு என்றும் தலைமை உரை வழங்கினார். சுரேஷ் சுப்ரமணியன் மற்றும் பாபு வெங்கடாசலபதி ஆகிய இருவரும் சிறந்த முன்னாள் மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த ஆண்டிற்கான முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள். 30 ஆண்டுகளுக்கு முன் தங்களை தேசியக் கல்லூரி மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தியதால்தான் இன்று வெற்றியாளர்களாக உயர்ந்திருக்கிறோம் என்று தம் ஏற்புறையில் விருத்தாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். தேசியக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரும் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர் ‌. கல்லூரி செயலர் திருமிகு கா.ரகுநாதன் அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார் ‌. பேராசிரியர் முனைவர் நந்தகோபால் அவர்கள் நன்றியுரை நல்கினார். எண்ணற்ற முன்னாள் மாணவர்களும் பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் திரளாகப் பங்கேற்று முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments