// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 




இந்நிகழ்வில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, பொன்னர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments