BREAKING NEWS *** ஈரான் அதிபர் மரணம் - பிரதமர் இரங்கல் *** அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம்

அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம்

 திருச்சி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், திருச்சி மாமன்ற உறுப்பினராக மக்களுக்கு அரும்பணிகள் செய்த செந்தில்நாதனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.


ரங்கராஜன் குமாரமங்கலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, திருச்சி பாராளுமன்றம் பெற்ற வளர்ச்சியை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் தம்பி செந்தில்நாதனை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும்போதும் பெறும் என்று உறுதி அளிக்கிறேன்.


தமிழக அரசியலில், திருச்சி என்றாலே திருப்புமுனை தான். திருச்சி பாராளுமன்றத் தேர்தலில் செந்தில்நாதன் அவர்கள், பிரஷர் குக்கர் சின்னத்தில் பெறவிருக்கும் வெற்றியானது, தமிழக அரசியலில் நிச்சயம் திருப்புமுனையைக் கொண்டு வரும்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக, திருச்சி மாநகரம் தத்தளிக்கிறது. மத்திய அரசின் நலத்திட்டங்களை, கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்க்க, இங்குள்ள திமுக, அதிமுகவினர் முயற்சி எடுக்கவில்லை. ஆனால், செந்தில்நாதன் வெற்றி பெற்று,மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கத் துணையிருக்கும் 400 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக, திருச்சிக்கு நிச்சயம் வளர்ச்சியைக் கொண்டு வருவார் என்பது உறுதி.


திருச்சியில், தமிழக பாஜக சார்பில், அத்தனை தலைவர்களும் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நிச்சயம் நடத்தவுள்ளோம். திருச்சியின் இழந்த பெருமையை மீட்டெடுக்க, ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில், செந்தில்நாதன் அவர்களுக்கு, கட்சி வேறுபாடின்றி, பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.இந்த நிகழ்ச்சியில் அமமுக, பாஜக,ஐஜேகே, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments