BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் சூறாவளி பிரச்சாரம்

பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் சூறாவளி பிரச்சாரம்

 தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் தொட்டியம், ஏலூர்பட்டி, காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் திறந்த வேனில் சுற்றுப்பயணம் செய்து தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்...


கடந்த தேர்தலில் என்னை வெற்றிபெற செய்தீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றி உள்ளேன். அரியலூர்-பெரம்பலூர்- துறையூர் வழியாக நாமக்கல் வரை ரெயில்வே திட்டத்தை கொண்டு வர முழு முயற்சி மேற்கொண்டுள்ளேன். மீண்டும் என்னை தேர்வு செய்தால் நிச்சயமாக இந்த ரெயில்வே திட்டத்தை நிறைவேற்றுவேன்.தொட்டியம் தாலுகாவில் உள்ள முள்ளிப்பாடி ஏரிக்கு காவிரி ஆற்றில் இருந்து நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுப்பேன். 


காவிரி ஆற்றின் குறுக்கே தொட்டியம் - லாலாபேட்டை இடையே புதிய தடுப்பணை கட்டி நீராதாரம் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொட்டியத்தில் வாழைப்பழத்தை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தொழிற்சாலை கொண்டுவரப்படும்.

எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.  முன்னதாக வேட்பாளர் பாரிவேந்தர் தொட்டியம், முசிறியில் இந்திய ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச் செயலாளர் ஜெயசீலன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கருணாகரன், பா.ஜனதா பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் லோகிதாசன், மாவட்ட துணை தலைவர் மணி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments