NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரச்சாரம்

நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும்  தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக நடிகை விந்தியா நேற்று திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூர், புதுக்கோட்டை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Post a Comment

0 Comments