புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோயில் முன்பாக மலர் கடைகள் அமைத்திருந்த பெண்களிடமும் வேட்பாளர் கருப்பையா வாக்குகள் சேகரித்தார். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகர் பகுதிகளான அடப்பன் வயல், வடக்கு 3ஆம் விதி, வடக்கு நான்காம் விதி, வ உ சி நகர்,
பாலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் கருப்பையா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..
வேட்பாளர் கருப்பையாவிற்கு பெண்கள் ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
0 Comments