// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி கேர் கல்லூரியில் 15 வது ஆண்டு தின விழா

திருச்சி கேர் கல்லூரியில் 15 வது ஆண்டு தின விழா

திருச்சி கேர் பொறியியல் கல்லூரி 15 வது ஆண்டு தின விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.


திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 15 வது ஆண்டு தின விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து கேர் கல்லூரி கல்வி மற்றும் விளையாட்டு துறை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார் . 



முன்னதாக பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாந்தி 23 மற்றும் 24 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கை வாசித்தார் மேலும் விழாவில் கேர் கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் சந்த் தலைமை தாங்கினார்


கேர் பொறியியல் கல்லூரியின் 15 ஆவது ஆண்டு தின விழாவில் துறை தலைவர்கள் பேராசிரியர் உதவி பேராசிரியர் மாணவர் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் விழாவில் கேர் பொறியியல் கல்லூரி மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தது

Post a Comment

0 Comments