BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சியில் நூன் அறக்கட்டளை சார்பில் நடமாடும் நீர்மோர் வாகனம் தொடங்கி வைப்பு

திருச்சியில் நூன் அறக்கட்டளை சார்பில் நடமாடும் நீர்மோர் வாகனம் தொடங்கி வைப்பு

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் திருச்சி  மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலை சமாளிக்க பொதுமக்கள் நீர்மோர்,  இளநீர், நுங்கு போன்ற பானங்களை பருகி வருகின்றனர்.


இந்த நிலையில்  பொதுமக்களின் வசதிக்காக வழக்கம் போல் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர்.


 அந்தவகையில் திருச்சி நூன் அறக்கட்டளை சார்பில், திருச்சியில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் நீர் மோர் வழங்க முடிவு செய்யப்பட்டது. 



அதனை தொடர்ந்து திருச்சி மாரீஸ் திரையரங்கம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் இருந்து நடமாடும் நீர்மோர் வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



 இந்த நிகழ்வில் புனித ஜான்பால் உரையாடல் மன்றத்தின் இயக்குநர் முனைவர் சார்லஸ், பிரம்மகுமாரிகள் இயக்கம் சகோதரி தேவகி, திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளரும், நூன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான மௌலானா அல்அமீன் யூசுஃபி, மாநில ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகக் குழு மாநில துணை தலைவர் மௌலவி முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஆகியோர் கலந்து கொண்டு நீர்மோர் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் நூன் அறக்கட்டளையின் தலைவர் முஸ்தபா, துணை தலைவர் சாகுல் ஹமீது, சையது முஸ்தபா, செயலாளர் இப்ராஹிம் கலீல், துணை செயலாளர் அப்துல் ரஷீத், யாசர் அராஃபத், பொருளாளர் சிராஜுதீன், ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஜக்கரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நடமாடும் நீர்மோர் வாகனம் மூலம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி, சிங்கராத்தோப்பு, பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், சுப்பிரமணியபுரம், ஏர்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments