// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஜெயிலுக்கு போக உள்ளார்கள் - பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு

திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஜெயிலுக்கு போக உள்ளார்கள் - பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு

பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் இன்று பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பாரிவேந்தர் பேசுகையில்...


நான் கடந்த 5 ஆண்டுகளாக எம்பியாக இருந்தபோது மக்களுக்காக பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளேன். அந்தத் திட்டங்கள் குறித்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன். மேலும் ஆயிரத்து 500 பேருக்கு இலவச கல்வி அளித்துள்ளேன். வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் இலவச உயர் சிகிச்சை அளிக்கவுள்ளேன். 


மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் மோடி நல்ல ஆட்சியை கொடுத்துள்ளார். எந்த ஊழலும் செய்யவில்லை. ஆனால் தமிழகத்தில் ஊழல் செய்ததன் காரணமாக அமைச்சர்கள் ஜெயிலுக்குப் போய் உள்ளனர். 

இன்னும் பல அமைச்சர்கள் ஜெயிலுக்கு போக உள்ளனர் எனவே நல்லாட்சி நடைபெற தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Post a Comment

0 Comments