// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** தமுமுக சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்

தமுமுக சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மேற்கு மாவட்டம் 29 வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் கடந்த 01 ம் தேதி முதல் மாநில மகளீர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா தலைமையில்  நடைபெற்ற இம் முகாமில் 15 க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர்.


பயிற்சி முகாமின் இறுதி நாளான நேற்று கடந்த 15 தினங்களாக பயிற்சியில் பங்கேற்ற 150  மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பயிற்சி நிறைவு விழா வார்டு தலைவர் அகமது கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, மாநில துணை செயலாளர்கள் முகமது ரபீக், நஜீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மமக பொதுசெயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது MLA, தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், IPP  மண்டல செயலாளர் சேக், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் அப்துல் ரஜாக், வார்டு நிர்வாகிகள் அப்துல் நாசர், காஜா, அப்துல் காதர், ஜாக்கீர், அரிசிகடை சிராஜ், இஸ்மாயில், ஹனிபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments