யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) என்ற அமைப்பு 2020 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் அடுத்தக்கட்ட பணிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த அமைப்பின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கேரளா மாநிலம் வயநாடு காரப்புழா ரெஸிடென்ஸி ஹாலில் நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாநில தலைவராக மீண்டும் பீமநகர் ரபீக் அவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மாநில செயலாளராக அப்பாஸ் அலி, மாநில பொருளாளராக ஷாஹீன், மாநில துணை தலைவராக பக்ருதீன், மாநில துணை செயலாளராக அன்சர்தீன், தலைமை மருத்துவ அணி செயலாளராக தென்னூர் முஸ்தபா, தலைமை மாணவரணி செயலாளராக சித்திக் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் கடந்தாண்டின் வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டு, வரும் ஆண்டில் அனைவரது ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுவது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 Comments