BREAKING NEWS *** சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் *** ஸ்ரீ ல ஸ்ரீ சாக்கடை சித்தர் அவர்களின் எட்டாம் ஆண்டு மகா குருபூஜை விழா

ஸ்ரீ ல ஸ்ரீ சாக்கடை சித்தர் அவர்களின் எட்டாம் ஆண்டு மகா குருபூஜை விழா

 ஸ்ரீ ல ஸ்ரீ சாக்கடை சித்தர் அவர்களின் எட்டாம் ஆண்டு மகா குருபூஜை விழா திருச்சியில் நடைபெற்றது.

ஸ்ரீ ல ஸ்ரீ பகவான் ஸ்ரீ சாக்கடை சித்தர் அவர்களின் எட்டாம் ஆண்டு மகா குருபூஜை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெரு ஸ்ரீ ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவில்  நடைபெற்றது. இந்த மகா குரு சிறப்பு பூஜையில் ஸ்ரீ பான் பராக் சித்தர் கலந்துகொண்டு பூஜைகளை தொடங்கி வைத்தார்.


அதன்படி  காலை 6 மணி அளவில் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய பூஜை. அதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் சஷ்டி திதியில் திரு ஓணம் நட்சத்திரம் கூடிய சித்த யோகத்தில் மகா குருபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநிலங்களிலிருந்து ஏராளமான சித்தர்கள் வருகை புரிந்து இந்த மகா குருபூஜை யாகத்தில் கலந்து கொண்டனர்..


மேலும் அவர்களுக்கு மகா அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தில் பங்கேற்ற சித்தர்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ பான்பராக் சித்தர் பிரசாதங்களை வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments