பாலஸ்தீனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து தமுமுக திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பாலஸ்தீனம் ராபா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்வதை கண்டித்தும், உலக நீதிமன்றத்தின் பிடிவாரத்திற்கு உள்ளான போர் குற்றவாளி நெதன் யாஷுவை சிறையில் அடைக்க வேண்டியும், உலக நாடுகள் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்றது..
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது மற்றும் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் அஷ்ரப் அலி முகமது இலியாஸ் பொருளாளர் காஜா மொய்தீன் மாவட்ட துணை நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கிளை கழகத்தின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
0 Comments