NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பாக திருச்சி அரவிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பாக திருச்சி அரவிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பாக வாசவி கிளப் வனிதா திருச்சி மற்றும் வாசவி கிளப் எலைட் கபில்ஸ் திருச்சி மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே உள்ள அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியில் ஆரோக்கியம் 2024 என்ற தலைப்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை இன்று நடத்தியது. 


இந்த இலவச மருத்துவ முகாமிற்கு டிஸ்ட்ரிக்ட் கவர்னர் கோல்டன் கே சி ஜி எஃப் ஆதிசேஷன் தலைமை தாங்கினார். 


சிறப்பு அழைப்பாளராக இன்டர்நேஷனல் பிரசிடெண்ட் டைமண்ட் கே சி ஜி எஃப் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை ரத்த பரிசோதனை கண் பரிசோதனை ஆயுர்வேதா நேச்சுரோபதி மற்றும் யோகா மேலும் எலும்பு பல் கண் தோல் ஆகியவற்றிற்கான சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 




முகாமில் கேபினட் செயலாளர் பாலமுருகன் கேபினட் பொருளாளர் ரவிச்சந்திரன் மண்டல சேர்பர்சன் திவ்யா வீரமணியன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் தலைவர் காயத்ரி செயலாளர் ஹேமாவதி பொருளாளர் மன்னர் லட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..




மேலும் இந்த மருத்துவ முகாமில் அரபிந்து இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

Post a Comment

0 Comments