டெல்லியில் கராத்தே 8 வது டிகிரி பிளாக் பெல்ட் (BLACK BELT 8th DAN) கான தேர்வு நடைபெற்றது. அந்த தேர்விற்கு பல்வேறு நாடுகளிலிருந்து இருந்து 500 க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதில் இந்தியாவின் சார்பாக - SKWFன் தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் அவர்கள் பங்கு பெற்று மிக உயர்ந்த கிரேடான 'A' கிரேடில் வெற்றி பெற்று அதற்கான ஜப்பான் சான்றிதழும் பெற்றார்.
சாதனை புரிந்து தாயகம் திரும்பிய அவரை SKWF ன் பயிற்சியாளர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருச்சி விமான நிலையத்தில் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
0 Comments