// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** டெல்லியில் நடைபெற்ற கராத்தே பிளாக் பெல்ட் 8வது டிகிரி பெற்று சாதனை படைத்த திருச்சி கராத்தே வீரர் சங்கர்

டெல்லியில் நடைபெற்ற கராத்தே பிளாக் பெல்ட் 8வது டிகிரி பெற்று சாதனை படைத்த திருச்சி கராத்தே வீரர் சங்கர்

 டெல்லியில் கராத்தே 8 வது டிகிரி பிளாக் பெல்ட் (BLACK BELT 8th DAN) கான தேர்வு நடைபெற்றது.  அந்த தேர்விற்கு பல்வேறு நாடுகளிலிருந்து இருந்து 500 க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.


அதில் இந்தியாவின் சார்பாக - SKWFன் தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் அவர்கள் பங்கு பெற்று மிக உயர்ந்த கிரேடான 'A' கிரேடில் வெற்றி பெற்று அதற்கான ஜப்பான் சான்றிதழும் பெற்றார். 


சாதனை புரிந்து தாயகம் திரும்பிய அவரை SKWF ன் பயிற்சியாளர்கள்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருச்சி விமான நிலையத்தில் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மிகவும் உற்சாகத்துடன்  வரவேற்றனர்.

Post a Comment

0 Comments