// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் - 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் - 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி தையல்காரத் தெரு பகுதியில்  நடைபெற்றது. 


இதில்  சேவா சங்க புரவலர்  முரளி, வழக்கறிஞர் சுதர்சன், சேவா சங்க பொருளாளர் சுரேஷ், உதவி தலைவர் முத்து, சௌராஷ்டிரா சங்கத்தை சேர்ந்த சகஸ்ரநாமம், ரமேஷ் பாபு மற்றும் வாலிபர் சங்கத் தலைவர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு  முகாமை துவக்கி வைத்தனர். 


இதில்  பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், பேருந்து மூலம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்த பின் மீண்டும் திருச்சிக்கு கொண்டு வந்து விடப்படுவர். 



இவை அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. முகாம் ஏற்பாடுகளை சௌராஷ்டிரா சங்க செயலாளர் அம்சராம், துணைத் தலைவர் முரளி, வெங்கடேஷ், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் 60 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Post a Comment

0 Comments