பிரசித்தி பெற்ற திருச்சி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் சிவனடியார்கள் உள்பட 450 பேர் உழவாரப்பணியில் ஈடுபட்டு தூய்மை செய்தனர்..திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் மதில் சுவர்கள் சுற்றிய பகுதிகளில் செடிகொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட திருச்சிற்றம்பலம் உழவாரப்பணி குழுவினர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.
450க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு நாள் முழுவதும் ஈடுபட்ட இந்த உழவாரப்பணியின்போது குளம், மதில் சுவர் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பல இடங்களில் செடிகொடிகளை அகற்றி தூய்மை படுத்தினர்.
0 Comments