திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்....
அதில், தமிழகத்தில் திமுக அரசு அமைந்தது முதல் எழை மற்றும் நடுத்தர என அனைத்து தாப்பு மக்களுக்கும் பல்வேறு சமூக நல திட்டங்களை செய்து வருகின்ற தங்களுடைய அரசு மாணவர்களுக்கு ஏராளமான கல்வி சார்ந்த திட்டங்களை வகுத்து வரும் குழ்நிலையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4ல வார்டு எண் 52 ல் அமைந்தள்ள பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 90 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது தற்போது சிறப்பாக மற்றும் தமிழ்வழியில் ஆங்கில வழி LKG முதல் 8ம் வகுப்பு வரை 800 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து உயர் நிலை கல்வி பயில் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகள் தொடங்கபட்டால் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும் இதனால் அனைத்து சமுதாய மக்களும் மிகயும் பயன் பெறுவார்கள் ஏனென்றால் சுற்றுவட்டார பகுதிமுழுவதும் தனியார் பள்ளிகள் மட்டுமே இருக்கின்றன மாநகராட்சி சார்பில் இந்த ஒரு பள்ளிக்கூடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மக்கள் நலனை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் தங்களுடைய அரசு இப்பள்ளியை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி வரும் கல்வியாண்டு முதல் செயல்பட அரசாணை வழங்கி ஆவண செய்யுமாறு மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தமது மனுவில் அவர் கூறியுள்ளார். மேலும் இம்மனுவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.
0 Comments