வாடகை கட்டடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்கள் வாடகையுடன் சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டி வழங்க வேண்டும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
நாடு முழுவதுமுள்ள வணிக கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகை தொகையோடு கூடுதலாக 18% தொகையை ஜி.எஸ்.டியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 80% மேற்பட்ட வணிகர்கள் வாடகை கட்டிடத்தில் தான் வணிகம் செய்து வரும் நிலையில் மத்திய அரசின் இவ் அறிவிப்பு வணிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த அறிவிப்பை கண்டித்தும் உடனடியாக அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவிந்தராஜுலு....தமிழகத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த புதிய ஜிஎஸ்டி அறிவிப்பை செயல்படுத்த மாட்டோமென தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
மாநில அரசு இந்த தீர்மானத்தை அறிவிப்பதோடு மத்திய அரசு போட்டுள்ள உத்தரவையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்களின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்காத பட்சத்தில் அகில இந்திய அளவிலான அடுத்த கட்ட போராட்டத்தை நாங்கள் நடத்துவோம் என்று தெரிவித்தார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானார் கலந்து கொண்டனர்.
0 Comments