இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பு அமைப்பான இளைஞர் அணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அஜீம் தலைமையில் பாலக்கரையில் நடைபெற்றது.மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல் காதர் இந்த ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் குறித்தும், இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் அணியின் சார்பில் டிசம்பர் 15 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு திரளான நிர்வாகிகள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் அணியின் மாநில நிர்வாகத்திற்கு திருச்சி மாவட்டத்திலிருந்து பஷீர் அலி அவர்களை நியமனம் செய்ய மாவட்ட மற்றும் மாநில நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் அணியை வலுப்படுத்தும் பொருட்டு அதிகமான இளைஞர்களை கட்சியில் இணைத்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் இளைஞர் அணி சார்பில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் நிசார் ஆலி, மாவட்ட துணைத் தலைவர்கள் முகம்மது, முகம்மது நியாஸ், துணைச் செயலாளர் முகமது பாசில் மற்றும் நிர்வாகிகள் பஷீர் அலி, நவாப் கான்,முகமது நாசர்,அலாவுதீன், முகம்மது சமீர்,முபசீர் தாலிப், முகம்மது பிலால், சையது முகமது,ஷபி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments